இது முதற்பொருள் முதலிய மூன்றற்கும் ஆவது ஒரு புறனடை
கூறுகின்றது, தமக்கு உரியவற்றோடன்றிப் பிறவற்றோடும் மயங்கும்
என்றலின்.
இ-ள் :முதல் கரு உரி என்னும் மூன்று கூற்றவாகிய பொருளும்
தமக்குத்தமக்கு உரிய திணையொடுகூடி இலக்கண முறையானே வாராது
பிறவற்றிற்கு உரிய திணையொடு கூடி மயங்கி வருதலும் உரியவாம் எ-று.
"மரபின் வாராது" என்ற மிகையானே, நிலம் என்னும் முதற் பொருள்
ஒழித்து ஏனையவே மயங்கி வரும் எனக் கொள்க.
வரலாறு: