அம்ம வாழி தோழி சிறியிலைக்
குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல் காதலர் சென்ற நாட்டே. (ஐங். 339)
என இவ்வைங்குறுநூற்றுள் முல்லைத்திணைக்கு உரிய மாலை
வந்ததூஉம்,
கல்மிசை மயில்ஆலக் கறங்கிஊர் அலர்தூற்றத்
தொன்னலம் நனிசாய நம்மையோ மறந்தைக்க
ஒன்னாதார்க் கடந்துஅடூஉம் உரவுநீர் மாகொன்ற
வென்வேலான் குன்றின்மேல்விளையாட்டும் விரும்பார் கொல் (கலி-27)
என இப்பாலைக்கலியுள் குறிஞ்சித்திணைக்கு உரிய மயில் வந்ததூஉம்,