168 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
உடைஇவள் உயிர்வாழாள் நீநீப்பின் எனப்பல இடைகொண்டுயாம் இரப்பவும் எமகொள்ளாய் ஆயினை கடைஇய ஆற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை அடையொடு வாடிய அணிமலர் தகைப்பன. (கலி-3)
என இப்பாலைக்கலியுள் மருதத்திணைக்கு உரிய பூ வந்ததூஉம்"
அன்னாய் வாழிவேண்டு அன்னைஎன் தோழி பசந்தனள் பெரிதுஎனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம் அறிய ஆகுமோ மற்றே முறிஇணர்க் கோங்கம் பயந்த மார்பே. (ஐங்-366)
என "இவ்வேறுபாடு என்" என்ற செவிலிக்குத் தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்ற இதனுள் புணர்ச்சி வந்ததூஉம்,
வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப நீநயந்து உறையப் பட்டோள் யாவ ளோஎம் மறையா தீமே. (ஐங். 370)
எனப் பரத்தையருக்குப் பூ அணிந்தமை கேட்ட தலைவி, "அஃது இன்று" என்றாற்குக் கூறிய இதனுள் ஊடல் வந்ததூஉம் முறையே பாலைத்திணையோடு முதற்பொருள் முதலிய மூன்றும் மயங்கி வந்தன.
மழைஇல் வானம் மீன்அணிந் தன்ன குழைஅமல் முசுண்டை வாலிய மலர வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் பெரிய சூடிய கவர்தார்க் கோவலர் எல்லுப்பெயல் உழந்த பல்ஆ நிரையொடு நீர்திகழ் கண்ணியர் ஊர்வயின் பெயர்தர