எனப்பருவவரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறிய இம் மணிமிடைபவளத்துள் முன்பனி வந்ததூஉம் முல்லைத் திணையொடு மயங்கி வந்தன.
கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றாக்
காதல் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை நும்மூர் வருதும்
ஒண்தொடி மடந்தை நின்னையாம் பெறினே. (ஐங்.92)
என "நின்தமர் வாராமையின் எமர் வரைவு நேர்ந்திலர்" என்று தோழி கூறக்கேட்ட தலைவன், தலைவிக்குக் கூறிய இவ்வைங்குறுநூற்றுள், குறிஞ்சித் திணைக்கு உரிய புணர்தல் மருதத்திணையோடு மயங்கி வந்தது.
தொல்லூழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தான்
பல்வயின் உயிர்எல்லாம் படைத்தான்கண் [பெயர்ப்பான்போல்
எல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ உலகுஆண்ட அரசன்பின்
அல்லது மலைந்திருந்து அறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம்போல் மயங்குஇருள் தலைவர
எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருள்மாலை
பனிஇருள் சூழ்தரப் பைதல்அஞ் சிறுகுழல்
இனிவரின் உயரும்மன் பழிஎனக் கலங்கிய
தனியவர் இடும்பைகண்டு இனைதியோ எம்போல
இனிய செய்து அகன்றாரை உடையை யோநீ (கலி. 129)
என இக்கலியுள், கங்குலும் மாலையும் முன்பனியும் வந்ததூஉம்,
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே. (ஐங்கு-122)
|
|
|
|