174                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 நிறைந்த கண்களைப்போலக் கருவிளை மலரவும், ஈங்கைப் புதரின் நெய்யில்
 தோய்த்து எடுத்தாற் போன்ற தளிர்கள் இருபிளவாகிய ஈரல்போல
 அசையவும், அவரை பூப்பவும், நெற்கதிர் முற்றிச் சாயவும், வண்டுகள்
 கிளைகளில் அசையும் முன்பனிக்கால நள்ளிருளில், "நம்துயரை அறியாது
 மன்னன் பாசறையில் இருக்கும் நம்தலைவர் வருவாரோ?" என்று எண்ணி
 வாடைக்காற்று வீசுதலால் என் தனிமைத்துயர் பொறாது நலிகின்றேன்" என்று
 தலைவி தோழியிடம் கூறும் இப்பாடலில், முல்லைக்கண் "சிதர்சினை
 தூங்கும் அற்சிர அரைநாள்" எனக் குறிஞ்சிக்கு உரிய முன்பனி மயங்கி
 வந்தவாறு.

     "கருங்கோட்டு எருமை"-

     "எருமை தன் கன்றுக்குப் பால் சுரந்து அளிக்கும் வளம் சான்ற
 நும்தந்தையார் இருக்கும் நும்ஊருக்கு, நம்வரைவு மாட்சிமைப்படின் யானே
 வருகின்றேன்" என்று தலைமகன் தலைவிக்குக் கூறும் இம் மருதக்குறுநூறு,
 கருப்பொருளாகிய எருமையால் மருதத்திணை ஆயினும், வரைவு மாட்சிமைப்
 படுதலாகிய குறிஞ்சி உரிப்பொருள் இதன்கண் மயங்கி வந்தவாறு.

     "தொல்லூழி தடுமாறி"-

     "பல உலகங்களில் உயிர் எல்லாம் பழையதாகிய ஊழிக் காலத்தே
 பிறந்து இறந்து தடுமாறித் திரியும்படி அயனாய்ப் படைத்தவன் அரனாய்
 ஊழிமுடிவில் தன்னிடத்தில் ஒடுக்கிக் கொள்ளுமாறுபோல, கதிரவன் தான்
 வெளிவிட்ட கிரணங்களை மீண்டும் தன்னிடத்து ஒடுக்கிக்கொண்டு
 மறைதலால், செங்கோல் மன்னன் இறந்தபின் அவன் இடத்திற்கு வந்த
 அறநெறி தப்பிய குறுநிலமன்னன் ஆட்சிக்காலம் போல, மயங்குஇருள் சூழப்
 பகற்பொழுதிற்கு எல்லையாகிய துயர் மிகுக்கும் மருள்மாலையில், வருத்தத்
 தினையுடைய அழகிய சிறிய வேய்ங்குழலே! "இப்பொழுது தலைவர்வரின்
 அவர்பழி