இஃது எய்தாதது எய்துவிக்கின்றது, கைக்கிளை பெருந்திணைக்கு உரிய
உரிப்பொருளும் இவற்றோடு மயங்கும் என்றலின்,
இ-ள் கைக்கிளைத்திணைக்கு உரிய ஒருதலைக்காமம் என்னும்
உரிப்பொருளும், பெருந்திணைக்கு உரிய பொருந்தாக்காமம் என்னும்
உரிப்பொருளும் குறிஞ்சித்திணை முதலிய ஐந்திணையோடும் மயங்கியும்
வரும் இயல்பை உடையன என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
வரலாறு: "ஊர்க்கால் நிவந்த" (கலி 56) என்னும் குறிஞ்சிக் கலியுள்,