அகத்திணையியல்-நூற்பா-24,25                            179


 

     "நன்னில மருதமும் தென்னில முல்லையும்
     துன்னிய கற்பொடு தோன்றும் என்ப".            மு. வீ. அக 42

     என்பனவற்றால் போதரும்.

ஒத்த நூற்பாக்கள்

     "களவும் கற்பும் கைகோளாக
     அளவில் அன்பினது அகம்எனப் படுமே.            வீ. 105 மேற்
     முழுதும்                                 ந.அ.26,மு. வீ. அக. 41

24

களவின் புணர்ச்சி வகை

 397 இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப் பாடு
     பாங்கற் கூட்டம் பாங்கியிற் கூட்டம் என்று
     உணர்த்திய களவின் புணர்ச்சிநால் வகைத்தே.

     இது, நிறுத்த முறையானே களவில் புணரும் புணர்ச்சி இத்துணைத்து
 என்கின்றது.

     இ-ள்:இயற்கைப் புணர்ச்சியும் அப்புணர்ச்சி நிகழ்ந்த நிலைக்களத்தைப்
 பின்னர்த் தலைப்பெய்து புணரும் புணர்ச்சியும் பாங்கனால் புணரும்
 புணர்ச்சியும் பாங்கியால் புணரும் புணர்ச்சியும் என முற்கூறிய களவு
 என்னும் கைகோளின் புணர்ச்சி நான்கு வகையினை உடைத்தாம் என்றவாறு.                                                              25

ஒத்த நூற்பாக்கள்

     "காமப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும்
     பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வும் என்று
     ஆங்கநால் வகையினும் அடைந்த சார்பொடு
     மறைஎன மொழிதல் மறையோர் ஆறே".        தொல். பொ. 494
     முழுதும்                                           ந. அ. 27                                                              25