18 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


பொய்த்தல், மறுத்தல், கழறல், மெய்த்தல் என்று வரைவு கடாவுதல்  
  நால்வகைப்படும் என்பது .... 150
     
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் முதலிய இருபதும் பிறவும்  
  வரைவு கடாவுதலின் விரி என்பது. .... 151
     
செலவு அறிவுறுத்தல் முதலிய ஏழும் ஒருவழித்தணத்தலின்  
  வகை என்பது. .... 152
     
தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றல் முதலிய பன்னிரண்டும் பிறவும்  
  ஒருவழித் தணத்தலின் விரி என்பது. .... 153
     
பிரிவு அறிவுறுத்தல் முதலிய ஒன்பதும் வரைவு இடை வைத்துப்  
  பொருள்வயின் பிரிதலின் வகைகள் என்பது. .... 154
     
  என் பொருட்பிரிவு உணர்த்து ஏந்திழைக்கு என்றல் முதலிய  
  இருபத்தொன்றும் பிறவும் வரைவு இடைவைத்துப் பொருள் வயின் பிரிதலின் விரிகளாம் என்பது .... 155
     
வரைவாவது, தலைவன் தலைவியை அவர் இருமுது குரவர் கொடுப்பவும்  
  கொடாது ஒழியவும் அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர விதிப்படி மணந்து கொள்ளுதலாம் என்பது. .... 156
     
வரைவுமலிவு, அறத்தொடுநிலை என்ற இரண்டும் வரைவின்  
  கிளவித்தொகையாம் என்பது .... 157
     
வரைவுமுயல்வு உணர்த்தல் முதலாக வரைவுமலிதல் நான்கு  
  வகைப்படும் என்பது . ... 158
     
காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல்  
  முதலியனவும் பிறவும் வரைவு மலிதலின் விரியாம் என்பது. .... 159