இது கைக்கிளையது இலக்கணம் கூறுகின்றது.
இ-ள் : மேல் கூறிப்போந்த கைக்கிளையாவது, காமம் நுகர்தற்கு
அமைந்த இளமைப்பருவத்தாள் ஆகிய தலைமகளிடத்து உண்டாகிய
குறிப்பினைத் தான் அறியும் அளவும் அவளைத் தலைமகன் அடாது நின்று,
தன் வழித்தாகிய நெஞ்சினோடு சொல்லுதலாம் என்றவாறு. 27