இ-ள் : மேல் கூறிய கைக்கிளை அந்தணரும் அரசரும் வணிகரும் சூத்திரரும் என்னும் நால்வகை வருணத்துத் தலைமக்கள் தமக்குத் தமக்குப் பொருந்துவதாம். அக்கைக்கிளையை மேல்கூறிய நால்வகைத் தலைமக்களும் அன்றி ஐவகை நிலத்தும் உறையும் நிலமக்களுள் தலைமக்களும் பெறுவர் என்றவாறு.
உம்மை இழிவு சிறப்பு ஆதலின், சிறுபான்மை நோக்கி நின்றது.
நால்வகை வருணத்தார் மருதநிலத்தில் பெரும்பாலும் உறைவாராவார். நிலமக்களுள் தலைமக்கள் பொருப்பன், காளை, குறும்பொறைநாடன், ஊரன், சேர்ப்பன் போல்வார்.
401 தெய்வம் தன்னின் எய்தவும் கிழத்தியின்
எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி.
இஃது இயற்கைப்புணர்ச்சி இத்துணைப் பகுதித்து என்கின்றது.
இ-ள் : மேல்கூறிய நால்வகைப் புணர்ச்சியுள்ளும், இயற்கைப் புணர்ச்சியாவது தெய்வத்தால் பெறவும் தலைமகளால் பெறவும் படும் என்றவாறு.
படும் என்பதனை இரண்டு இடத்தும் கூட்டுக. 29
இயற்கைப் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, காமப் புணர்ச்சி என்பன ஒரு பொருளன.
|
|
|
|