அகத்திணையியல்-நூற்பா-29,30                            183


 

     இயற்கைப்புணர்ச்சி-புலவரால் கூறப்பட்ட இயல்பினானும், கந்தருவ
 வழக்கத்தோடு ஒத்த இயல்பினானும் புணரும் புணர்ச்சி.

     தெய்வப் புணர்ச்சி-தெய்வ அருளால், முயற்சியும் உளப்பாடும் இன்றிப்
 புணரும் புணர்ச்சி

     முன்னுறு புணர்ச்சி-இவள்நலம் இவனாலே முன்னுற எய்தப்
 பெற்றமையாலும், இவன்நலன் இவளால் முன்னுற எய்தப் பட்டமையாலும்
 நிகழும் புணர்ச்சி.

     காமப்புணர்ச்சி-தலைவனுக்குப் பெருமையும் உரனும், தலைவிக்கு
 நாணும் மடனும் அச்சமும் நுணுகக் காமத்தால் புணரும் புணர்ச்சி.

ஒத்த நூற்பாக்கள்

    முழுதும்                                        ந அ. 32, 29

தெய்வப்புணர்ச்சி்

 402 இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி
     முயற்சி இன்றி முடிவது ஆகும்.

     இது, மேற்கூறிய இயற்கைப் புணர்ச்சி இரண்டனுள் தெய்வப்
 புணர்ச்சியது இலக்கணம் உணர்த்துகின்றது.

     இ-ள் : இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தால் பெறுங்காலத்து
 முயற்சியின்றித் தானே முடிவதாம் என்றவாறு

     எனவே, இயற்கைப் புணர்ச்சி தலைமகளால் பெறுங்காலத்து
 முயற்சியானே முடிவதாம் என்றவாறு.                              30

ஒத்த நூற்பாக்கள்

    முழுதும்                                         ந அ. 33, 30