ஆற்றிய பகுதியில் சென்ற உள்ளம் மீட்டலும் மேம்பட்ட தலைவற்கு உரிய
எனக்கொள்க. தலைவி அச்சமும் நாணும் மடனும் உடையள் எனவே,
தலைவன் பெருமையும் உரனும் உடையனாய் வேட்கை மீதூரவும்
பெறுமாயிற்று. இவை இவட்கு என்றும் உரியவாயின் இயற்கைப்புணர்ச்சிக்கு
உரியள் அல்லளாம் ஆயினும், இவ்விலக்கணத்துள் திரியாது நின்றேயும்
புணர்ச்சிக்குஉரியளாம் என்றற்குப் பன்னிரண்டு மெய்ப்பாடும் கூறினார்"
என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.