192 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
ஒத்த நூற்பாக்கள்
"அவன்வரம்பு இறத்தல் அறம்தனக்கு இன்மையின் களஞ்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும் தான்செலற்கு உரியவழி ஆக லான" தொல். பொ. 120 "தோழியின் முடியும் இடனுமா ருண்டே." "" "" 121 "குறிஎனப் படுவது இரவினும் பகலினும் அறியத் தோன்றும் ஆற்றது என்ப" "" "" 130 "இரவுக் குறியே இல்லகத் துள்ளும் மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான." "" "" 131 "பகல்புணர் களனே புறன்என மொழிப அவள்அறிவு உணர வருவழி யான" "" "" 132 குறிஎனப் படுவது இரவினும் பகலினும் அறியக் கிளந்த இடம்என மொழிப" இறை. கள. 18 "இரவுக் குறியே இல்வரை இகவாது." "" "" 19 "பகற்குறி தானே இகப்பினும் வரையார்." "" "" 20 "இரவுமனை இகந்த குறியிடத்து அல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை" "" "" 21 முழுதும்- ந. அ. 37, 38
34
களவிடைப் பிரிவுகள்
407 ஒருவழித் தணத்தல் வரைவுஇடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்என்று இருவகைத்து ஆகும் நிறைதரு காதல் மறையினில் பிரிவே.
இது, நிறுத்தமுறையானே களவு என்னும் கைகோள் இடத்துப் பிரியும பிரிவு இத்துணைப் பகுதித்து என்கின்றது.
இ-ள் : ஒருவழித்தணத்தலும் வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலும் என இரண்டு பகுதியினை உடைத்தாம், நிறைந்த காதலைஉடைய களவின்கண் பிரியும் பிரிவு என்றவாறு.