194                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 409 வரைவுஇடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்ஓர்
      இருதுவின் எல்லைத்து என்மனார் புலவர்.

     இது காலவரையறை கூறப்படுவது இது என்கின்றது.

     இ-ள் : வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதல் காடு
 இடையிட்டும் நாடு இடையிட்டும் பிரிதலின், அஃது இரண்டு திங்களின்
 வரம்பை உடைத்து என்று சொல்லுவர் அறிவுடையோர் என்றவாறு.       37

ஒத்த நூற்பாக்கள்

     "களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
     திங்கள் இரண்டின் அகம்என மொழிப.'            இறை. கள. 32
     முழுதும்-                                           ந. அ. 41

37

 வரைவு நிகழிடன்

 410 களவு வெளிப்படா முன்னும் பின்னும்
     விளையும் நெறித்துஎன விளம்பினர் வரைவே.

     இது மேலைச் சூத்திரத்துள் தோற்றுவாய் செய்யப்பட்ட வரைவு நிகழும்
 இடம் கூறுகின்றது.

     இ-ள் : களவு வெளிப்படா முன்னும் களவு வெளிப்பட்ட பின்னும்
 வரைவு நிகழும் நெறியினை உடைத்தாம் என்று சொல்லுவர் அறிவுடையோர்
 என்றவாறு.

     வெளிப்படாமுன்னும் என்பதனால் வெளிப்பட்டபின்னும் எனத் தந்து
 உரைக்கப்பட்டது.                                               38

ஒத்த நூற்பா

     முழுதும்.-                                          ந. அ. 42
                                                              38