411 நான்குவகைப் புணர்வினும் தான்தெருண்டு வரைதலும்
பாங்கனின் பாங்கியின் தெருள்உற்று வரைதலும்
களவுவெளிப் படாமுன் வரைதல் ஆகும்.
இது களவு வெளிப்படாமுன் நிகழும் வரைவுக்கு இலக்கணம் கூறுகின்றது.
இ-ள் : மேல் சொல்லப்பட்ட இயற்கைப்புணர்ச்சி முதலாகிய நான்கு
வகைப் புணர்ச்சிக்கண்ணும் தலைமகன் தானே தெருண்டு வரைதலும், பாங்கனான் ஆதல் பாங்கியான் ஆதல் தெருட்டப்பட்டு வரைதலும் ஆகிய இவை களவு வெளிப்படாமுன் வரைவாம் என்றவாறு. 39
இயற்கைப் புணர்ச்சியின் பின்னரோ இடந்தலைப்பாட்டின் பின்னரோ தலைவன் தானே 'களவு கூடாது' என்று தெளிந்து வரைதலும், பாங்கற்கூட்டத்தின் பின் தானே தெளிந்தோ பாங்கன் தெளிவித்தோ
வரைதலும், பாங்கியிற் கூட்டத்தின் பின் தானே தெளிந்தோ பாங்கி தெளிவித்தோ வரைதலும் களவு வெளிப்படாமுன் வரைதலாம்.
412 உடன்போய் வரைதலும் மீண்டு வரைதலும்
உடன்போக்கு இடையீடு உற்று வரைதலும்
களவுவெளிப் பட்டபின் வரைதல் ஆகும்.
இது, களவு வெளிப்பட்டபின் நிகழும் வரைவுக்கு இலக்கணம் கூறுகின்றது.
|
|
|
|