196                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இ-ள் :புணர்ந்து உடன்போய்த் தலைமகன் தன் ஊரின்கண்ணே
 வரைதலும், மீண்டுவந்து தம் ஊரின் கண்ணே வரைதலும், உடன்போக்கு
 இடையீடு உற்றுத் தலைமகன் தலைமகள்தமரை வழிபட்டு வரைதலும்
 ஆகிய இவை களவு வெளிப்பட்டபின் வரைதலாம் என்றவாறு.          40

 விளக்கம்

     தலைவனும் தலைவியும் ஒரே ஊரினராகவும் வேற்று வேற்று
 ஊரினராகவும் இருத்தல் கூடும்.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்-                                                       ந. அ. 44
                                                             40

     உடன்போய் வரைதல்

     அவற்றுள்,

 413 உடன்போய் வரைதல் ஒருவகைத்து ஆகும்.

     இஃது உடன்போய் வரைதலின் வகை உணர்த்துகின்றது.

     இ-ள்; மேல்சொல்லப்பட்ட மூவகை வரைவினுள் உடன்போய்த் தன்
 ஊரின்கண்ணே வரைதல் ஒருவகையினை உடைத்தாம் என்றவாறு.       41

 விளக்கம்

     தன் ஊர் என்பது தலைவன் தமர் ஊரையும் சுட்டும்.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்-                                          ந. அ. 45
                                                             41

     மீண்டு வரைதல்

 414 அவள்மனை வரைதலும் தன்மனை வரைதலும்
     எனமீண்டு வரைதல் இருவகைத்து ஆகும்.