இது மீண்டுவரைதலின் வகை உணர்த்துகின்றது.
இ-ள் தலைமகள்மனையின்கண்ணே வரைதலும் தலைமகன் மனையின் கண்ணே வரைதலும் என இரண்டு வகையினை உடைத்தாம், உடன்போய் மீண்டு தம் ஊரின் கண்ணே வரைதல் என்றவாறு. 42
415 ஆற்றுஊறு அஞ்சினும் அவன்வரைவு மறுப்பினும்
வேற்றுவரைவு நேரினும் காப்புக் கைமிகினும்
ஆற்றுறத் தோன்றும் அறத்தொடு நிலையே.
இது மேல்கூறிய வரைவிற்கு நிமித்தம் கூறுகின்றது.
இ-ள் தலைமகன் வருவழி ஏதத்தினை அஞ்சிய இடத்தும், தமர் அவன்வரைவு எதிர்கொள்ளாத இடத்தும், பிறர் வரைவு நேரும் இடத்தும், காவல் கைமிகுந்த இடத்தும் நெறிப்படப் புலப்படும் அறத்தொடுநிலை என்றவாறு.
அறத்தொடுநிலை-அறத்தொடு மாறுகொள்ளாத நிலை. 43
அறத்தொடுநிலை-தக்கதனைச் சொல்லிநிற்றல், கற்பின் தலை நிற்றல் என்பதும் ஆம்.
"காப்புக்கை மிக்குக் காமம் பெருகினும்,
நொதுமலர் வரையும் பருவம் ஆயினும்,
வரைவுஎதிர் கொள்ளாது தமர்அவண் மறுப்பினும்,
அவன்ஊறு அஞ்சும் காலம் ஆயினும், |
|
|
|