416 தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும் பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும் ஒற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்கும் என்ப நெறிஉணர்ந் தோரே.
இஃது இவர் இவர்க்கு அறத்தொடுநிற்றற்கு உரியர் என்கின்றது.
இ-ள் தலைவி முதலிய நால்வரும் பாங்கி முதலிய நான்கு திறத்தார்க்கும் முறையே அறத்தொடுநிற்றற்கு உரியர் என்று சொல்லுவர் அகப்பொருள் இலக்கணம் அறிந்தோர் என்றவாறு. 44