200                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     "சொல்லெதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்
     அல்ல கூற்றுமொழி அவள்வயி னான".                    " 110

     இம்மூன்று நூற்பாவானும் தலைவி தோழியிடத்து நாணம் நீங்கிக்
 கூற்று நிகழ்த்துதற்கு உரியளாமாறு உணரப்படும்.

     முழுதும.்-                                          ந. அ. 49

45

பாங்கி அறத்தொடு நிற்கும் திறன்.

 418 முன்னிலைப் புறமொழி முன்னிலை மொழிகளின்
     சின்மொழிப் பாங்கி செவிலிக்கு உணர்த்தும்.

     இது பாங்கி அறத்தொடுநிற்கும் திறம் கூறுகின்றது.

     இ-ள் முன்னிலைப்புறமொழியும் முன்னிலை மொழியும் ஆகிய
 இரண்டினானும் பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் என்றவாறு.      46

     "அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி
     அறத்தியல் மரபுஇலள் தோழி என்ப".           தொல். பொ. 206

     "எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல்
     கூறுதல் உசாதல் ஏதீடு தலைப்பாடு
     உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ
     அவ்வெழு வகைய என்மனார் புலவர்".                    ""207

     "உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்
     அப்பொருள் வேட்கை கிழவியின் உணர்ப"                 208

     "தோழிக்கு உரியவை கோடாய் தேஎத்து
     மாறுகோள் இல்லா மொழயுமார் உளவே".          இறை. கள. 14

     முழுதும்-                                           ந. அ. 50

46