கத்திணையியல்-நூற்பா-47,48 201
செவிலி அறத்தொடு நிற்குமாறு
419 செவிலி நற்றாய்க்குக் கவலையின்று உணர்த்தும்.
இது செவிலி அறத்தொடு நிற்கும் திறம் கூறுகின்றது.
இ-ள் செவிலி அறத்தொடு நிற்கும் காலத்து நற்றாய்க்கு விளங்க அறிவிக்கும் என்றவாறு. 47
ஒத்த நூற்பாக்கள்
"தாய்அறி வுறுதல் செவிலியோடு ஒக்கும்". தொல். பொ. 138 முழுதும்- ந. அ. 51
47
நற்றாய் அறத்தொடு நிற்றல்
420 நற்றாய் அறத்தொடு நிற்குங் காலைக் குரவனும் தன்னையும் குறிப்பின் உணர்ப.
இது நற்றாய் அறத்தொடுநிற்கும் திறம் கூறுகின்றது.
இ-ள் நற்றாய் அறத்தொடு நிற்குங் காலத்துச் சொல்லாடப் பெறாள் ஆகலின், தலைமகள்தந்தையும் தன்னையும் அவள் குறிப்பினானே அறிவர் என்றவாறு. 48
"தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப." தொல். பொ. 137 முழுதும்- ந அ. 52
48
26