இஃது அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம் கூறுகின்றது.
இ-ள் தலைமகள்மாட்டு வேறுபாடு கண்டுழிப்பாங்கி முதலாகிய
மூவரும் இவ்வாறு வினவப் பெறுவர் என்றவாறு.
"பாங்கி தன்னையும் நற்றாய் தானும்" என்ற உம்மைகள் முறையே
"நற்றாய் செவிலியை வினவுதலும் பாங்கியைச் செவிலி வினவுதலும் அன்றி"
என்னும் பொருள்படநின்றன. இவ்வாறு நற்றாய் வினாவுவது செவிலியைப்
போலத் தலைமகளை உற்றுப்பார்த்த இடத்து எனக்கொள்க. 49