இ-ள் : கற்பு என்னும் கைகோள்இடத்துப் புணரும் புணர்ச்சி குரவரால் புணரும் புணர்ச்சியும்,
வாயில்களால் புணரும் புணர்ச்சியும் என இரண்டு பகுதியினை உடைத்து என்றவாறு.
குரவரின் புணர்ச்சி வதுவை கூட்டிப்புணரும் புணர்ச்சி; வாயிலின்
கூட்டம் புலவி தீர்த்துப் புணரும் புணர்ச்சி.
424 களவின் வழிவந்த கற்பின் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய் வரைதலும் உண்மை யான. இது களவின்வழி வந்த கற்பின்புணர்ச்சிக்கு எய்துவது ஒரு வேறுபாடு உணர்த்துகின்றது.
இ-ள் : மேல் சொல்லப்பட்ட இருவகைக் கற்பினுள்ளும் களவின் வழிவந்த கற்பினுள் புணரும் புணர்ச்சி, தலைமகள் சுற்றத்தாரால் பெறப்படாத கோட்பாட்டினையும் உடைத்தாம், புணர்ந்து உடன்போய்த் தலைமகன் தன்ஊரின் கண்ணே வரைந்துகோடலும் உண்டு ஆதலான் என்றவாறு.
"கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துஉடன் போகிய காலை யான" தொ. பொ. 143 53
என்ப ஆகலின், 53
"கொடுப்போர் ....... ........ ......... காலையான." " 143
முழுதும்- ந. அ. 57 53
|
|
|
|