அகத்திணையியல்-நூற்பா-54,55                            205


 

இருவகைப் புணர்ச்சி

 426 மறையின் புணர்ச்சியும் மன்றல் புணர்ச்சியும்
     இறைவற்கு எய்தல்உண்டு இருவகைக் கற்பினும்.

     இது தலைமகற்குக் கற்புக்காலத்து நிகழும் புணர்ச்சி வேறுபாடு
 கூறுகின்றது.

     இ-ள் : மேல் சொல்லிய இருவகைக் கற்பின்கண்ணும் தலைமகற்குக்
 களவிற்புணர்ச்சியும் வதுவைப் புணர்ச்சியும் பொருந்துதல் உண்டு
 என்றவாறு.                                                   54

ஒத்த நூற்பா

     முழுதும்-                                           ந. அ. 58
                             

54

இருவகைப் புணர்ச்சிக்கும் உரிய மகளிர்

 427 காதற் பரத்தையர் காமக் கிழத்தியர்
     பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்திஎன்று
     அன்னவர் உரியர் அவைஇரண் டற்கும்,

     இஃது அவ் விருவகைப் புணர்ச்சிக்கும் உரிய மகளிர் இவர் என்கின்றது.

     இ-ள் : காதற்பரத்தையர் முதலாகிய மூவகையோரும் தலைமகன்
 அவ்வாறு புணரும் புணர்ச்சி இரண்டற்கும் உரியர் என்றவாறு.          55

விளக்கம்

     தலைவன் பலரை முறையே வரைதல் அக்கால மரபாதல் "பின்முறை
 ஆக்கிய பெரும்பெயர் வதுவை" (தொல். பொ. 172) என்பதனானும்
 பெறப்படும்.

ஒத்த நூற்பா

     முழுதும்-                                           ந. அ. 59
                                          

55