206 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
களவிற்கு உரியார்
அவருள்,
428 காதல் பரத்தையர் களவிற்கு உரியர்.
இது களவிற்கு உரிய மகளிர் இவர் என்கின்றது.
இ-ள் : மேல் சொல்லப்பட்ட மூவகையோருள்ளும் காதல் பரத்தையர் களவின்புணர்ச்சிக்கு உரியர் என்றவாறு. 56
முழுதும்- ந.அ.60
56
429 ஒழிந்தோர் மன்றல் புணர்ச்சிக்கு உரியர்.
இது வதுவைப் புணர்ச்சிக்கு உரிய மகளிர் இவர் என்கின்றது,
இ-ள் : காமக்கிழத்தியும் பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியும் ஆகிய இருதிறத்தோரும் வதுவைப்புணர்ச்சிக்கு உரியர் என்றவாறு.57
முழுதும்- ந.அ.61
57
430 பரத்தையின் பிரிதல் ஓதற்குப் படர்தல் அருள்தரு காவலொடு தூதிற்கு அகறல், உதவிக்கு ஏகல் நிதியிற்கு இகத்தல்என்று உரைபெறு கற்பின் பிரிவுஅறு வகைத்தே.
இது கற்பின் பிரியும் பிரிவுவரையறை உணர்த்துகின்றது.