அகத்திணையியல்-நூற்பா-58                              207


 
ஒத்த நூற்பாக்கள்

    

     "ஓதல் பகையே தூதுஇவை பிரிவே"              தொல். பொ. 25

     "கற்பினுள் துறவே கடிவரை இன்றே"              இறை. கள. 34

     "ஓதல் காவல் பகைதணி வினையே
     வேந்தர்க்கு உற்றுழி பொருட்பிணி பரத்தைஎன்று
     ஆங்க ஆறே அவ்வயின் பிரிவே"                இறை. கள. 35


    முழுதும்.                                            ந. அ. 62


     "பெருகும்இல் வாழ்க்கை பரத்தையில் பிரிதல்
     செருவினுக்கு உற்றுழிச் செல்வ துடனே
     பொருவில் புரத்தலின் பொருள்வயின் பிரிதல்
     தூதில் பிரிதல் சுருதி முதலிய
     ஓதப் பிரிதலோடு ஓரேழ் என்ப
     கிளந்த கற்பின் கிளவித் தொகையே."            மாறன். அக. 98

     தொல்காப்பிய அகத்திணையியலுள் தலைவன் கூற்றில் இவ்வறுவகைப்
 பிரிவும் இடம் பெறும். (41 ஆம் நூற்பா)

     "வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு
     ஊதியம் கருதிய ஒருதிறத்தானும்"- ஓதல்
     "காவற்பாங்கின் ஆங்கோர் பக்கமும்" - காவல்
     "தூதுஇடை யிட்ட வகையி னானும்" - தூது
     "புகழும் மானமும் எடுத்துவற் புறுப்பினும் - பகை
     தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - ""
     ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்" - ""
     "ஒன்றாப் பொருள்வயின் ஊக்கியபாலினும்" -பொருள்
     "மூன்றன்பகுதியும்" -
     "பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி
     இரத்தலும் தெளித்தலும்" - பரத்தை                                                              58