208 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
431 அயல்மனைப் பிரிவு அயல்சேரியின் அகற்சி புறநகர்ப் போக்குஇவை புரவலற்கு உரிய பரத்தையின் பிரியும் பருவத் தான.
இது தலைமகன் பரத்தையின் பிரியும் காலத்து இவ்விடங்களில் பிரியும் என்கின்றது.
அயல் மனை முதலிய மூன்று இடத்துப் பிரிவும் தலைவற்கு உரியவாம் பரத்தையின் பிரியுங் காலத்து என்றவாறு. 59
முழுதும். ந.அ. 63
59
432 கெழீஇய காமக் கிழத்தியர் பொருட்டாய்த் தழீஇய அயன்மனைத் தலைவன் பிரியும்.
இது நிறுத்தமுறையானே அயல்மனைப்பிரிவுக்கு ஏது கூறுகின்றது. இ-ள் : பொருந்திய காமக்கிழத்தியர் காரணமாகத் தலைமகன் தோள்தோய்ந்த அயல்மனைக்கண்ணே பிரியும் என்றவாறு. 60
விளக்கம்
காமக்கிழத்தியைப் பக்கத்து மனையிலேயே அமர்த்திக் கொள்வான் என்பது. நிறுத்தமுறை சென்ற நூற்பாவில் நிறுத்தியமுறை.
முழுதும். ந.அ.64 60