அகத்திணையியல்-நூற்பா-61,62                             209


 

அயற்சேரிக்குப் பிரிவு

 433 பின்னர் வரைந்த பெதும்பையும் பரத்தையும்
      இன்னியல் விழவும் ஏது வாக
      அவன்அயல் சேரியில் அகலும் என்ப.

      இஃது அயல்சேரியில் பிரிவுக்கு ஏது உணர்த்துகின்றது.

     இ-ள் : இரண்டாவது வரைந்து கொள்ளப்பட்ட பெதும்பைப்பருவக்
 கிழத்தியும் காதல்பரத்தையும் விழவும் காரணமாகத் தலைமகன்
 அயல்சேரியின்கண்ணே பிரியும் என்றவாறு.                         61

விளக்கம்


     தலைமகன் ஆதலின், விழாவினை முன்இருந்து நடத்தும் கடப்பாடு
 உடையன் என்பது.

ஒத்த நூற்பா

     "பரத்தையின் பிரிவே நிலத்திரிபு இன்றே."         இறை. கள. 42


       முழுதும்                                          ந. அ. 65

                                                              61

புறநகர்க்குப் பிரிதல்

 434 விருந்துஇயல் பரத்தையைப் பெருந்தேர் மிசைக்கொண்டு
     இளமரக் காவில் விளையா டற்கும்
     புனலா டற்கும் புறநகர்ப் போக்கும்.

     இது புறநகர்ப் போக்கிற்கு ஏது உணர்த்துகின்றது.

     இ-ள் : இளமரக்காவின்கண்ணே விளையாடுதல் காரணமாகவும்
 புனலாடுதல் காரணமாகவும் தலைமகன் புதியள் ஆகிய பரத்தையைத்
 தேர்மேல் ஏற்றிக்கொண்டு நகர்ப்புறத்திலே போம் என்றவாறு.