210                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     புனல் ஆடல் கூறவே, அதற்கு ஏதுவாகிய புதுப்புனல் வரவும்
 கொள்ளப்படும். அதற்குச் செய்யுள்:

     ஏராடு சிந்துர இந்திர சாபம் இறைஞ்சுநுதல்
     வேராட நீல விழிசிவப் பாட விளங்கிழையார்
     தாராடு பைங்குழல் பின்னகம் ஆடத் தழூஉச்சிவிறிப்
     போராட வந்தது தண்புனல் ஆடல் புரவலற்கே.


 எனவரும்                                            (அம்பி. 474)

     புனலாடற்குச் செய்யுள்:

     குருகோடு கம்புள் குலம்இரிந் தார்ப்பக் கொடுந்திரைசூழ்
     இருகோடு மள்ளர் எறிபறை ஆர்ப்ப இடுமணற்குன்று
     அருகோடு தண்புனல் வண்புனல் ஊரனொ டாடுதற்கு
     வருகோடி அன்புடை யார்ஒரு கோடி மடந்தையரே.

 எனவரும். இளமரக்காவில் விளையாடற்கு உதாரணம் வந்துழிக்காண்க.   62

விளக்கம்

    தலைவியும் தலைவனோடு புனலாடற்கும் பொழிலில் விளையாடற்கும்
 சேறலும் உண்டேனும், அஃது ஒரோவழி நிகழ்வது; பரத்தையுடன்
 புனலாடலும் பொழில் விளையாடலுமே பெரும்பான்மை என்பது அறிக.

 "ஏராடு சிந்துர"-

     தலைவன் பரத்தையருடன் அவர்தம் அழகிய சிந்துரத்திலகமிட்ட நுதல்
 வேர்வை துளிப்பவும், கண்கள் சிவப்பவும் அவன் அணிந்த மாலையைச்
 சூடிய அவர்கள் கூந்தல் ஆடவும், அவனோடு குரவையாடிப் பின்
 சிவிறியால் நீரைத்தூவி விளையாடற்கு யாற்றில் புதுப்புனல் வந்தது
 என்றவாறு.

 "குருகோடு கம்புள்"-

     குருகுகளும் கம்புள்களும் ஆகிய பறவைகள் ஆரவாரித்து நீங்கவும்,
 யாற்றின் இருகரைகளிலும் மள்ளர்