அகத்திணையியல்-நூற்பா-62,64 211
பறை ஒலிக்கவும், மணல்மேட்டின் அருகில் ஓடிவரும் தண்புனலில் தலைவனோடு நீர்விளையாட்டு நிகழ்த்த விருப்பம்மிக்க பரத்தையர் பலராகக் கூடினர் என்றவாறு.
முழுதும் ந. அ. 66
62
ஊடல் நிகழ் இடன்
435 ஊடல் அவ்வழிக் கூடும் கிழத்திக்கு.
இது தலைவிக்கு ஊடல் நிகழும் இடம் கூறுகின்றது. இ-ள் : அம்மூன்று பிரிவின்கண்ணும் தலைமகட்கு ஊடல் பொருந்தும் என்றவாறு. 63
விளக்கம்
மூன்று பிரிவு 61 ஆம் நூற்பாவில் சொற்றவை.
முழுதும் ந. அ. 67
63
வாயில்கள்
436 கொளைவல பாணன் பாடினி கூத்தர் இளையோர் கண்டோர் இருவகைப் பாங்கர் பாகன் பாங்கி செவிலி அறிவர் காமக் கிழத்தியர் காதல் புதல்வன் விருந்துஆற் றாமை என்றுஇவை ஊடல் மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் தாமே.
இது, மேல் சொல்லப்பட்ட வாயில்கள் ஆவன இவை என்கின்றது. இ-ள் : பாணன் முதலாக ஆற்றாமை ஈறாகச்சொல்லப் பட்ட இவை அனைத்தும் தலைமகள் ஊடலை மருந்தாய்த் தீர்க்கும் வாயில்களாம் என்றவாறு.