212 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
ஒத்த நூற்பாக்கள்
"தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்கள் என்பர்". தொல். பொ. 193
முழுதும் ந. அ. 68
ஓதற் பிரிவு
437 ஓதல் தொழில்உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும்.
இஃது ஓதல்தொழிலுக்கு உரியது ஒருசிறப்பு உணர்த்துகின்றது. இ-ள் : வேதம் ஓதல் என்னும் தொழில் அந்தணர் அரசர் வணிகர் என்கின்ற மூவர்க்கும் உரித்து என்றவாறு. 65
"ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன". தொல். பொ. 26 "ஓதலும் காவலும் உயர்ந்தோர்க்கு உரிய". இறை. கள. 36
முழுதும் ந. அ. 69
தொ. வி. 173
"மறையோர் மன்னர் வணிகர்வே ளாளருள் ஓதல் தொழில்உரித்து உயர்ந்தோர் மேன." மு. வீ. அக. 43
(65)
438 அல்லாக் கல்வி எல்லார்க்கும் உரித்தே.