அகத்திணையியல்-நூற்பா-66,67 213
இ-ள் : வேதம் அல்லாத கல்வி நால்வருக்கும் உரித்து என்றவாறு.
"உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தி னான." தொல். பொ. 31
முழுதும் ந. அ. 70. தொ. வி. 173
(66)
439 படைக்கலம் பயிறலும் பகடுபிற ஊர்தலும் உடைத்தொழில் அவற்குஎன உரைத்திசி னோரே.
இது நாவினால் கற்கும் தொழில் அல்லாத கல்வித் தொழில் உரிமை உணர்த்துகின்றது. இ-ள் : படைக்கலன்களைக் கற்றலும், யானையும் தேரும் குதிரையும் முதலாயின ஊர்தலும் உரிமை ஆகிய தொழில் எனக் கூறினார் புலவர் என்றவாறு. "பிற" என்றதனால் தேரும் குதிரையும் முதலாயின கொள்ளப்பட்டன. பகடுபிற என்பது உம்மைத்தொகை. 67
"வேந்து வினை இயற்கை வேந்தனின் ஒரீஇய ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே." தொல். பொ. 32
முழுதும்- ந. அ. 71, தொ. வி. 174
"அயில்வேல் அத்திரம் அவாவொடு பயிறல் கலினவாம் புரவி கலிதேர் ஊர்தல் உடைத்தொழில் அவர்க்குஎன உரைத்திசி னோரே"
மு. வீ. அக. 45
67