214                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 
காவற்பிரிவின் வகை

 

 440 அறப்புறம் காவல் நாடு காவல்எனச்
     சிறப்புஉறு காவல் திறம்இரு வகைத்தே.

     இது காவல்பிரிவு இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் : அறப்புறம் காத்தற்குப் பிரியும் பிரிவும், நாடு காத்தற்குப்
 பிரியும் பிரிவும்என மேம்பாடு உற்ற காவற்குப் பிரியும் பிரிவு
 இருவகையினை உடைத்தாம் என்றவாறு. 68

ஒத்த நூற்பா

 

     முழுதும்.-                                          ந. அ. 72

     "காவல் அறப்புறங் காவலும் நாடு
     காவலும் எனஇரு வகைப்படும் எனலே.           மு. வீ. அக. 46

68

அறப்புறம் காவல்

 

 441 அவற்றுள்,
     அறப்புறம் காவல் அனைவர்க்கும் உரித்தே.

     இது நிறுத்த முறையானே முன்னையதற்கு உரிமை கூறுகின்றது.

     இ-ள் : மேல் சொல்லிய இரண்டனுள் அறப்புறம் காத்தற்குப் பிரியும்
 பிரிவு அந்தணர் முதலிய நால்வர்க்கும் உரித்து என்றவாறு.69

ஒத்த நூற்பாக்கள்

 

     முழுதும்-                      ந.அ.73,தொ.வி.185 மு. வீ. அக. 47