"மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையால்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே." தொல். பொ. 28
"மன்னர் பாங்கில் பின்னோரும் ஆகுப" "" "" 30
"ஏனைக் காவல் இறைவர்க் குரிய" மூ. வீ. அக. 48
"அரசர் அல்லா ஏனை யோர்க்கும்
புரைவது என்ப ஓரிடத் தான." இறை. கள. 38