"ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன". தொல். பொ. 26
"வேந்துவினை இயற்கை பார்ப்பார்க்கு உரித்தே". இறை. கள. 37
முழுதும்- ந. அ. 75, தொ, வி. 186
"இருபிறப் பாளர் இறைவர்என்று இருவர்க்கும்
தூது போதல் தொழில்உரித்து ஆகும் மு.வீ. அக. 49
நாடு காவற்கும் தூதிற்கும் புறனடை
444 சிறப்புப் பெயர்பெறின் செப்பிய இரண்டும்
உறற்குஉரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும்.
இது மேலனவற்றிற்கு ஒரு புறனடை கூறுகின்றது.
இ-ள் : அரசனால் சிறப்புப்பெயர் பெற்றாராயின், மேல் கூறிய நாடுகாவல் பிரிவும் தூதில் பிரிவும் பொருந்துதற்கு உரிய மரபினவாம், ஏனை வணிகரும் சூத்திரரும் என்னும் இருதிறத்தாருக்கும் என்றவாறு.
உரியமரபு "உரிமரபு" என விகாரம் ஆயிற்று. 72
"மன்னர் பாங்கின் பின்னோரும் ஆகுப" தொல். பொ. 30
"வேந்துவினை இயற்கை வேந்தனின் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்துஇடன் உடைத்தே" " 32
முழுதும்.- ந. அ. 75, தொ, வி. 187 28
|
|
|
|