218 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
"பெருமா னாற்சிறப் புப்பெயர் பெறினே மொழிந்தோர் இருவர்க்கும் உரிய ஆகும்" மு. வீ. அக. 50
72
பகைவயின் பிரிவு
445 உதவி அந்தணர் ஒழிந்தோர்க்கு உரித்தே.
இது நிறுத்த முறையானே உதவிநிமித்தம் பிரியும் பிரிவிற்கு உரியார் இவர் என்கின்றது. இ-ள் : அரசர்க்குப் பகைவரான் ஊறு உற்றுழி உதவிக்குப் பிரியும் பிரிவு அந்தணர் ஒழிந்த மூவர்க்கும் உரித்தாம் என்றவாறு 73
ஒத்த நூற்பாக்கள்
"தானே சேறலும் தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே." தொல். பொ. 27
முழுதும்- ந. அ. 77
73
பரத்தையிற்பிரிவும் பொருட்பிரிவும்
446 பரத்தையின் பிரிவும் பொருள்வயின் பிரிவும் உரைத்த நால்வர்க்கும் உரிய வாகும்.
இது நிறுத்த முறையானே பரத்தையின் பிரிவிற்கும் பொருள்வயின் பிரிவிற்கும் உரியார் இவர் என்கின்றது. இ-ள் : பரத்தையின் பிரிவும் பொருள்வயின் பிரிவும் ஆகிய இரண்டும் மேல் சொல்லப்பட்ட நால்வர்க்கும் உரியவாம் என்றவாறு.
"மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே". தொல். பொ. 29