"பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே." தொல். பொ. 33
"பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே
நிலத்திரிபு இன்று அஃது என்மனார் புலவர்" " 224
"வேந்தர்க்கு உற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென்று
ஆங்க இரண்டும் இழிந்தோர்க்கு உரிய" இறை. கள. 39
"காதல் பரத்தை நால்வர்க்கும் உரித்தே" தொல். பொ. 40
முழுதும்.- ந. அ. 78
447 இழிந்தோர் தமக்கும் இவற்றுள்மேம் பட்டவை
ஒழிந்தன வாம்என மொழிந்தனர் புலவர்.
இது நிலமக்களுள் தலைமக்கட்கு உரியன கூறுகின்றது.
இ-ள் : இவ்வறுவகைப் பிரிவுள்ளும் மேம்பட்டனவாகிய ஓதலும் நாடு காவலும் தூதுபோதலும் ஆகிய மூன்றும் ஒழித்து அல்லாதன எல்லாம் ஒழிந்தோர்ஆகிய நிலமக்களுள் தலைமக்கட்கு உரியவாம் எனச் சொல்லுவர் அறிவோர் என்றவாறு.
75
நிலமக்களுள் தலைமக்கள் - பொருப்பன், விடலை, குறும் பொறைநாடன், ஊரன், சேர்ப்பன் போல்வார். செய்யுளுள் இவர்களே பெரும்பாலும் தலைவராக வருதலைக் காண்கிறோம்.
448 கல்வி முதலா எல்லா வினைக்கும்
சொல்லி அகறலும் சொல்லாது அகறலும்
உரியன் கிழவோன் பெருமனைக் கிழத்திக்கு.
|
|
|
|