220                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இது பிரியும் தலைமகற்கு உரியதுஓர் இலக்கணம் உணர்த்துகின்றது.

     இ-ள் : கல்வி முதலாகிய ஐந்து வினைக்கும் தலைமகன் தலைமகட்குச்
 சொல்லிப் பிரிதலும் சொல்லாது பிரிதலும் உரியன் என்றவாறு.          76

விளக்கம்

     ஐந்து என்றது, பரத்தையிற்பிரிவு ஒழித்த ஏனைய பிரிவுகளை.

ஒத்த நூற்பா

     முழுதும்-                                           ந அ. 80

76

தோழியிடம் கூறிப்பிரிதல்

 449 சொல்லாது அகலினும் சொல்லும் பாங்கிக்கு.

     இதுவும் அது,

     இ-ள் : தலைமகன் தலைமகட்குச் சொல்லாது பிரியுமாயினும்,
 தோழிக்குச் சொல்லியே பிரியும் என்றவாறு.                         77

விளக்கம்

     பரத்தையிற் பிரிவு ஒழித்து ஏனையனவே தலைவன் கூறுவன் என்பது.

ஒத்த நூற்பா

     முழுதும்-                                           ந. அ. 81
                                                             77

தலைவியிடம் குறிப்பான் பிரிவு உணர்த்தல்

 450 குறிப்பின் உணர்த்தும் பெறல்அருங் கிழத்திக்கு.

     இதுவும் அது.

     இ-ள் : தலைமகன் சொல்லாது பிரியும் ஆயினும் குறிப்பினால்
 உணர்த்தும் தலைமகட்கு என்றவாறு.                              78