அகத்திணையியல்-நூற்பா-78,80 221
ஒத்த நூற்பா
"செய்பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும் எய்த உணர்த்தும் கிழவிபா ராட்டே தொல். பொ. 232 முழுதும் - ந. அ. 82 78
பிரிதற்கண் பொதுஇயல்பு
451 காலில் சேறலும் கலத்தில் சேறலும் ஊர்தியில் சேறலும் நீதி ஆகும்.
இது பிரியுங்காலத்து நால்வர்க்கும் பொதுஆவது ஓர் இயல்பு உணர்த்துகின்றது.
(இ-ள்) காலிற்போதல் முதலாகிய மூன்றும் எல்லாப் பிரிவின்கண்ணும் எல்லார்க்கும் இயல்பாம் என்றவாறு. 79
முழுதும்- ந. அ. 83 79
அந்தணர்க்கு ஆகாத பிரிவு
452 புலத்தில் சிறந்த புரிநூல் முதல்வர்க்குக் கலத்தில் சேறல் கடன்அன்று என்ப.
இஃது அந்தணர்க்கு ஆகாதது ஓர்இயல்பு கூறுகின்றது.
இ-ள் : காலில்சேறல் முதலாகிய மூன்றனுள்ளும், கலத்தில்சேறல் அறிவினான்மிக்க அந்தணர்க்கு முறைமை அன்று என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. 80
விளக்கம்
கலத்தில் போங்கால் செலவு பன்னாட்கு ஆகும். ஆதலின், நாடோறும் செய்யும் இறைவழிபாடு முட்டுப்படுதலின் கலத்தில்சேறல் அந்தணர்க்கு ஆகாது என்றவாறு.