இஃது அரசர் முதலாகிய மூவர்க்கும் ஆகாதது ஓர் இயல்பு கூறுகின்றது.
இ-ள் குலமட மாதரொடு கூடக் கலம்மிசைக் சேறலும் பாசறைக்கண் சேறலும் ஆகிய இரண்டும் வெற்றிஉயர் சிறப்பினை உடைய வேந்தர் முதலாகிய மூவர்க்கும் குற்றம் என்று சொல்லுவர் கற்றுவல்லோர் என்றவாறு.
மணம்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள் (சிலப். வஞ்சின67)