224                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

தலைவன் செலவு அழுங்கல்

 454 ஓதல் முதலா ஓதிய ஐந்தினும்
     பிரிவோன் அழுங்கற்கும் உரியன் ஆகும்.

     இதுவும் தலைமகற்குப் பிரிவிடத்து உரியதொரு வேறுபாடு கூறுகின்றது.

     இ-ள் : ஓதல் முதலாகச் சொல்லப்பட்ட ஐந்தன்கண்ணும் பிரியும்
 தலைமகன் போதற்கே அன்றிப் போதாமைக்கும் உரியன் என்றவாறு.     82

விளக்கம்

     ஈண்டும் பரத்தையிற்பிரிவு ஒழித்து ஏனையவே கொள்க.

ஒத்த நூற்பா

     முழுதும்.-                                           ந அ. 86

82

தலைவன் அழுங்கும் இடம்

 455 இல்லத்து அழுங்கலும் இடைச்சுரத்து அழுங்கலும்
     ஒல்லும் அவற்குஎன உரைத்திசி னோரே.

     இதுவும் அது.

     இ-ள் : பிரியக்கருதிய தலைமகன் இல்லின்கண்ணே செலவு
 அழுங்குதலும், இடைச்சுரத்தின்கண்ணே செலவு அழுங்குதலும் என
 இரண்டற்கும் உரியன் எனக் கூறுவர் புலவர் என்றவாறு.

     புணரின் புணராது பொருளே பொருள்வயின்
     பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்
     செல்லினும் செல்லாய் ஆயினும்
     நல்லதற்கு உரியை வாழிய நெஞ்சே.                     நற் 16

 எனவும்,