"புணரின் புணராது" -
தலைமகளோடு உடன் உறைந்திருப்பின் செல்வம்கிட்டாது; செல்வம்
கிட்டின் தலைமகள் புணர்வு நிகழாது; மனமே! நீ பொருள்வயிற் பிரிதலைக்
கருதி வரினும், அன்றேல் பிரிவைத் தவிர்ப்பினும் நன்றாகிய ஒன்றையே
பற்றி அமைதியாக இரு என்றவாறு.
"தொழுது வணங்கி" -
தலைவியிடம் பணிவன்புகாட்டிப் பூச்சூட்டித் தொய்யில் எழுதி
அவளழகில் ஈடுபட்டுத்தழுவிய அளவில், அவள் கண்கள் அழுது பசந்து
சிவந்தன. ஆகவே, நாம் பிரியின் அவள் இறந்துபடுதல் திண்ணம்
என்றவாறு.
"சென்றே வினைமுற்றி"-
பாலை நிலத்தே என்னையும் அழைத்து வந்து இப்பொழுது வருந்தும்
மனமே! ஒன்று, போய்ச் செயலை முடித்துப்
29