226                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

  பின் மீளுதல் வேண்டும். இன்றேல் அன்றே பிரிவைத் தவிர்ந்து
 இருத்தல் வேண்டும்; இப்பொழுது இடைச்சுரத்து நீ வருந்தும் நிலைக்கு என்
 செய்வேன் என்றவாறு.

     முதற் பாடல்பொது. இரண்டாம் பாடல் இல்லத்து அழுங்கல். மூன்றாம்
 பாடல் இடைச்சுரத்து அழுங்கல்.

ஒத்த நூற்பா

     முழுதும்.-                                           ந அ. 87

83

தலைவன் அழுங்கலின் கருத்து

 456 தலைவி தன்னையும் தன்மனம் தன்னையும்
     அலமரல் ஒழித்தற்கு அழுங்குவது அல்லது
     செல்வத் தோன்றல் செல்லான் அல்லன்.

     இஃது எய்தியது விலக்குகின்றது.

     இ-ள் : இல்லத்துத் தலைமகளையும் தன்நெஞ்சினையும் தேற்றுதல்
 காரணமாகவும், இடைச்சுரத்துத் தன் நெஞ்சினைத் தேற்றுதல் காரணமாகவும்
 அழுங்கும் மாத்திரம் அல்லது, தலைமகன் போகான் அல்லன் என்றவாறு

     இல்லத்துத் தலைமகனைத் தேற்றியதற்குச் செய்யுள்:

     பொன்னும் மணியும் போலும் யாழநின்
     நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
     போதும் பணையும் போலும் யாழநின்
     மாதர்உண் கண்ணும் வனப்பின் தோளும்
     இவைகாண் தோறும் அகம்மெலிந்து யானும்
     அறநிலை பெற்றோர் அனையேன் அதன்தலைப்
     பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
     வினையும் வேறுபுலத்து இலனே நினையின்
     யாதனின் பிரிகோ மடந்தை
     காதல் தானும் கடலினும் பெரிதே.                     (நற். 166)

    எனவரும். பிறவும் அன்ன                                    84