எய்தியது-செலவு அழுங்குதல்; விலக்குதல்-அழுங்கல் தவிர்ந்து சேறல்.
"பொன்னும் மணியும்" -
"தலைவியே! நின்மேனி பொன்போலவும், கூந்தல் நீலமணிபோலவும்,
கண்கள் குவளைபோலவும், தோள்கள் மூங்கில் போலவும் உள. இவற்றைக்
காணும்தோறும் நான் இவற்றைப் பிரிதற்கு அகம் மெலிந்து, இவற்றை
நுகர்தலால் நல்வினை நிலைபெற்றாரைப் போல உளேன். மேலும் என்னை
மகிழ்விக்க என்புதல்வனும் விளையாடல் கற்றுவிட்டான். இவற்றை விடுத்து
எனக்கு வேற்றிடத்தில் வேலைஇல்லை. உன்னிப்பார்க்கின், காதலே
கடலினும் பெரிது ஆதலின் எதற்காகப் பிரியப் போகிறேன்? என்று
தலைவன்தலைவி அலமரல் தவிர்த்தவாறு.