இது தூதிற்பிரிவு முதலாகிய மூன்று பிரிவிற்கும் காலவரையறை
உணர்த்துகின்றது.
இ-ள் : தூது காரணமாகப் பிரியும் பிரிவும், துணை இடமாகப்
பிரியும் பிரிவும், பொருள் காரணமாகப் பிரியும் பிரிவும் ஓர் யாண்டின்
எல்லையினை உடையவாம் என்றவாறு.
பரத்தையிற் பிரிவுக்கும் காவல் பிரிவுக்கும் காலவரையறை கூறார்
ஆயினார், அவை காடு இடையிட்டும் நாடு இடையிட்டும்
பிரியப்படாமையின். 86