இது தூதும் துணையும் காரணமாகப் பிரிந்த தலைவற்கு ஆவது
ஒரு வேறுபாடு கூறுகின்றது.
இ-ள் : தூது காரணமாகவும் உதவி காரணமாகவும் பிரிந்த தலைவன் அத்தொழில்கள் அப்பிரிவிற்கு உரிய ஓர்யாண்டின்கண் முடியாது நீட்டித்த காலத்து, பாசறைக் கண்ணே இருந்து வெறுத்துப் புலம்புதல் செய்யவும் பெறும் என்றவாறு.