அகத்திணையியல்-நூற்பா-89,90                            231


 

ஒத்த நூற்பா

     பாசறைப் புலம்பலும்"                            தொல். பொ. 41

     முழுதும்-                                           ந அ. 93
                                                             89

 

தலைவியின் கற்புக்காலத்து ஒழுகலாறுகள்

 462 பூத்தமை சேடியின் புரவலர்க்கு உணர்த்தலும்
     நீத்தமை பொறாஅது நின்றுகிழ வோனைப்
     பழிக்கும் காமக் கிழத்தியைக் கழறலும்
     கிழவோற் கழறலும் வழிமுறை மனைவியைக்
     கொழுநனொடு உவந்துஎதிர் கோடலும் அவனொடும்
     பாங்கொடும் பரத்தையைப் பழித்தலும் நீங்கிப்
     புறநகர்க் கணவனொடு போகிச் செறிமலர்ச்
     சோலையும் காவும் மாலைஅங் கழனியும்
     மாலைவெள் ளருவியும் மலையும் கானமும்
     கண்டுவிளை யாடலும் கடும்புனல் யாறும்
     வண்டுஇமிர் கமல வாவியும் குளனும்
     ஆடிவிளை யாடலும் கூடும் கிழத்திக்கு.

     இது தலைவிக்குக் கற்புக்காலத்துக்கு உரிய ஒழுகலாறு எல்லாம்
 தொகுத்து உணர்த்துகின்றது.

     இ-ள் : பூத்தமை சேடியின் புரவலர்க்கு உணர்த்தல் முதலாகக் குளன்
 ஆடல் ஈறாகச் சொல்லப்பட்டன எல்லாம் கற்புக்காலத்துத் தலைமகட்குப்
 பொருந்தும் என்றவாறு.

  கற்பு என்பது அதிகாரத்தான் வந்தது.
  இவற்றுள், தலைவி புனல்ஆடற்குச் செய்யுள்:
  அடங்கா அசுரர் குலம்அறுத் தோர்அத்தி ஊரர்வென்றி
  மடங்காதநேமி வரதர்தன் நாட்டில்தம் மைந்தனுடன்
  முடங்காமல் அந்த மனைவியும் போய்முயன்று ஊரனுடன்
  தடங்காவும் யாறும் குளனும்சென்று ஆடவும் தக்கதுவே.

(அத்தியூர்க்கோவை)

 எனவும்,