"முருகார் முளரியும்"-
தலைவி, "யானும் பரத்தையும் மன்மதன் போன்ற என் தலைவனுக்கு முறையே தாமரையும் முள்ளியும், பொன்னும் இரும்பும், விண்மீனும் கெண்டை மீனும் போல்வேம்" என்று தன்னோடு ஒப்பிட்டுப் பரத்தையைப் பழித்தவாறு.
"யாறும் குளமும் காவும் ஆடிப்
பதிஇகந்து வருதலும் உரித்துஎன மொழிப." தொல். பொ. 191
முழுதும்- ந. அ.94 90
463 வாயில் வேண்டலும் வாயில்நேர் வித்தலும்
சேயிழை ஊடல் தீர்த்தலும் போயுழி
அவள்நலம் தொலைவுகண்டு அழுங்கலும் அவன்வயின்
செல்ல விரும்பலும் சென்றுஅவற்கு உணர்த்தலும்
சொல்லிய கூற்றுஎனச் சொல்லும் கிழவோன்
வரவு மீண்டுவந்து அரிவைக்கு உணர்த்தலும்
அணிநலம் பெற்றமை அறியான்போன்று அவட்
பணிவொடு வினாதலும் பாணற்கு உரிய.
இது மேல் கூறிப்போந்த வாயில்களுள் பாணற்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.
இ-ள் வாயில்வேண்டல் முதலாகச் சொல்லப்பட்டன எல்லாம் பாணற்கு உரியனவாம் என்றவாறு. 91
மேற்கூறிப்போந்த-64ஆம் நூற்பாவில் கூறிய.
தலைவியை வாயில்வேண்டி உடன்படச்செய்தலும், அவள் ஊடலை நீக்குதலும், தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற
|
|
|
|