வழி அவள் அழகு அழிவு கண்டு வருந்தலும், தலைவன் பிரிந்து சென்ற
இடம் நோக்கிச் செல்லுதலை விரும்பலும், தலைவனிடம் தலைவிநிலையை
உரைத்தலும், தன்னிடம் உரையாடிய தலைவன் மீண்டுவரும் நாளினைத்
தலைவிக்குக் கூறலும், தலைவன் வந்தபின் தலைவி மகிழ்ச்சியால் திளைக்கும்
போது தான் வந்து தலைவன் வருகையை அறியாதான்போல அதுபற்றித்
தலைவியை வினவுதலும் பாணனுக்கு உரிய தொழில்களாம் என்றவாறு.