அகத்திணையியல்-நூற்பா-91,92                            235


 

     உறுதி காட்டலும் அறிவுமெய் நிறுத்தலும்
     ஏதுவின் உணர்த்தலும் துணிவு காட்டலும்
     அணிநிலை உரைத்தலும் கூத்தர் மேன."                  " 168

     "நிலம்பெயர்ந்து உறைதல் வரைநிலை உரைத்தல்
     கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய".     தொல். பொ. 169

     முழுதும் -                                       ந. அ. 95 91

விறலி தொழில்கள்

 464 செலவில் தேற்றலும் புலவியில் தணித்தலும்
     வாயில் வேண்டலும் வாயில்நேர் வித்தலும்
     தெரிஇழை விறலிக்கு உரிய ஆகும்.

     இது விறலிக்கு உரியனஎல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.

     இ-ள் செலவின் தேற்றல் முதலாகச் சொல்லப்பட்டன எல்லாம்
 விறலிக்கு உரியனவாம் என்றவாறு.                                92

விளக்கம்

     தலைவனுடைய கல்விமுதலிய பிரிவின்கண் தலைவிக்கு ஆறுதல்மொழி்
 கூறுதலும், தலைவனுடைய பரத்தையிற் பிரிவின்கண் தலைவியினுடைய்
 புலவியைத்தீர்த்தலும், தலைவனுடைய வாயிலாகச் சென்று தலைவியின்
 ஊடல் தீருமாறு வேண்டலும், ஊடல் தீர்த்து இருவரையும் கூட்டுவித்தலும்
 விறலியின் தொழில்களாம்.

     காண்பாருக்கு மெய்ப்பாடு தோன்றுமாறு ஆடுதலின் கூத்தி்
 விறலி எனப்பட்டாள். விறல்-மெய்ப்பாடு.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும் -                                       ந. அ.    96
                                                             92