இது கண்டோர்க்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.
இ-ள் புலவி தீர்த்தல் முதலாகிய எல்லாம் கண்டோர்க்கு உரியனவாம் என்றவாறு.
விளக்கம்
தலைவியின் புலவியை ஊடற்காலத்துத் தீர்த்தலும், பரத்தையின் பிரிவு ஒழித்து ஏனைய பிரிவுகளில் தலைவன் மீண்டு வருதலைத் தலைவிக்கு உணர்த்தலும் கண்டோர்க்கு உரிய செயல்களாம் என்றவாறு.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்- ந. அ. 99 96
பார்ப்பனப் பாங்கன் தொழில்
468 இளமையும் யாக்கையும் வளமையும் எனவும் நிலையாத் தன்மை நிலைஎடுத்து உரைத்தலும் செலவுஅழுங்கு வித்தலும் செலவுஉடன் படுத்தலும் பிறவும் எல்லாம் மறையோற்கு உரிய.